மரியாதைக்குரிய சகோதரர் இஸ்மாயில் சுல்தான் அவர்கள் எமது ரய்யான் ஹஜ், உம்ரா நிறுவனத்தைப் பற்றி ..
ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் மூலம் எங்கள் குடும்பத்தினர்கள் 13 நபர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட புனித உம்ரா பயணம் மேற்கொண்டு கடந்த வாரம் தாயகம் திரும்பினர். அல்ஹம்துலில்லாஹ்!
ரய்யான் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் சேவையின் அடிப்படையில் அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். உம்ரா பயண முன்பதிவும்போது உறுதியளித்தது போல் ஹரமுக்கு அருகில் தங்குமிடம், அனைத்து வயதினருக்கும் ஏற்ற சுவையான தமிழக உணவு மற்றும் வழிகாட்டுதல் உட்பட அனைத்தும் சிறந்த முறையில் இருந்தது. மேலும் அசௌகரியங்கள் ஏற்படாதவாறு ஒவ்வொருவருக்கும் தேவையான வசதிகளை அழகான முறையில் நிவர்த்தி செய்து கொடுத்தது அவர்களின் தனி சிறப்பு. அல்ஹம்துலில்லாஹ்!
உம்ரா பயணம் சென்று திரும்பிய அனைவரும் இன்ஷா அல்லாஹ் ஹஜ்பயணமும் ரய்யான் நிறுவனத்தின் மூலம் சென்று வர வேண்டும் என்று என்னிடம் கூறியது அந்த நிறுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையை பல மடங்கு கூட்டியது.
அல்லாஹ் மென் மேலும் தங்களுக்கு பரகத் செய்வானாக !
முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி) நூல்: புகாரி (2446)
அன்புடன்,
இஸ்மாயில் - அபுதாபி
Comments
Post a Comment