Skip to main content

Testimonial from Bro. Hassan (54)

மரியாதைக்குரிய சகோதரர் ஹஸன் அவர்கள் எமது ரய்யான் ஹஜ்இ உம்ரா நிறுவனத்தைப் பற்றி ..

இந்த மே மாத துவக்கத்தில் ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் (பிளாக் அண்டு ஒயிட் டூர்ஸ்) மூலம் மேற்கொண்ட  உம்ரா பயணத்தில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பன்னிரெண்டு பேர்களுடன் சேர்த்து 65 நபர்களை கொண்ட குழுவாக பயணம் செய்து சிறப்பாக திரும்பி வந்தோம்.

மக்கா மதினாவில் கேட்டு கேட்டு செய்த சர்வீஸ், வயதானவர்களுக்கு அவர்களின் தேவைகளை, சிரமங்களை உணர்ந்து செய்த பணிவிடைகள், இடம் தெரியாமல் சென்று விட்ட மூத்தவர்களை இரவில் வெகு நேரமானாலும் தேடி அழைத்து வரும் பக்குவம், உடல்நிலை சரியில்லாதவர்களை உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் அக்கறையான செயலாற்றல், தேவையென்றால் பொருள் செலவை பொறுப்படுத்தாது செலவு செய்யும் தாராள குணம், முதியவர்களுக்கு லக்கேஜ் கட்டி கொடுத்தல், அவர்களின் பொருள்களை சென்னை விமான நிலையம் வரை
தூக்கி சுமந்தது போன்ற எண்ணெற்ற பணிகளை இந்த நிறுவனம் சிறப்பாக செய்தது.

மக்காவிலும் மதினாவிலும் மார்க்க வழி காட்டிகளின் உதவிகள், மக்கா, மதினாவை கடந்து தாயிப், பத்ர், உஹத் என வரலாற்று தளங்களை பார்வையிட அழைத்துச் சென்றது அனைத்தும் மனநிறைவை தந்தது.

சமூக நலனில் அக்கறைக் கொண்ட தோழர்கள் இணைந்து செய்யும் இச்சேவை வளர்ச்சியடைய நீடித்த துவா செய்கிறேன்.

- எம்.ஜெ.ஹஸன், ஜமாலியா, பெரம்பூர்

Comments

Popular posts from this blog

88th Umrah Batch Departure

88th batch of Umrah pilgrims departed from Chennai Airport on 25.04.2018

பயணிகளுக்கான புதிய நடைமுறைய அறிமுகப்படுத்திய சவுதி அரசு

விமான நிறுவனங்கள் பயணிகளின் தகவல்களை பெறும் மின்னனு விண்ணப்பங்களுக்கான லிங்கை இணையதளத்தில் வெளியிடவேண்டுமென சவூதி அரேபியாவின் விமானத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, கீழ்க்கண்ட சுற்றறிக்கையை காணவும்..

இஸ்லாமிய பரிசுப் போட்டி

புனித உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளுக்காக 12.05.2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி மதீனாவில் நடைபெற்றது. இறுதியில் கேள்வி-பதில் போட்டி நடத்தி சரியாக பதிலளித்த மூன்று பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.